விசமிகள் அட்டகாசம்; பொறுப்பானர்கள் மௌனம்; அழிவை எதிர்நோக்கும் விவசாய கிராமம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி திக்கம் பகுதியில் விவசாய நிலங்களிற்கு இடப்படும் வேலியை விசமிகள் தொடரந்தும் அடித்து உடைத்து வருகிறார்கள். இது தொடர்பில் பொறுப்பு வாய்ந்தவர்களிடம் மக்கள் முறையிட்டும் விசமிகளின் அட்டகாசம் தொடர்ந்தபடியே இருக்கின்றன.

அல்வாய் வடமேற்கு திக்கம் கமக்கார அமைப்பினால் கொங்கிரீட் தூண்கள் இடப்பட்டு அமைக்கப்பட்ட வேலியே நாசமாக்கப்பட்டு வருகிறது. இந்த மாத ஆரம்பத்தில் வேலி நாசமாக்கப்பட ஆரம்பித்தபோது, தமிழ்பக்கத்தில் அந்த செய்தி வெளியாகியிருந்தது.

இங்கு கிளிக் செய்து அந்த செய்தியை படிக்கலாம்

திக்கத்தில் கடற்கரையை அண்டிய பகுதியில் அமைந்துள்ள இந்த விவசாய நிலங்கள் விளைச்சலிற்கு பெயர் பெற்றவை. இங்கு உற்பத்தியாகும் வெங்காயத்திற்கு அதிக கிராக்கி உள்ளது.

எனினும், அண்மைக்காலத்தில் விவசாய நிலங்களை சுற்றி விவசாயிகள் அல்லாதவர்களின் குடியிருப்புக்கள் பெருகி விட்டன. மீன்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களும் இந்த தோட்ட நிலத்தினூடாகவே பயணிக்கின்றன. அந்த பகுதியிலிருப்பவர்கள் ஆடு, மாடுகளை இந்த தோட்ட நிலத்திலேயே மேய்ச்சலுக்காக கட்டுகிறார்கள்.

இதனால் இரண்டு போகத்தில் மட்டுமே விவசாயத்தில் ஈடுபட முடிவதாகவும், தாம் பாதிப்பை எதிர்கொள்வதாகவும் விவசாயிகள் நீண்டகாலமாக முறையிட்டு வந்தனர். இதையடுத்து அல்வாய் வடமேற்கு திக்கம் கமக்கார அமைப்பினால் விவசாய நிலங்களை சுற்றி வேலியிடும் முடிவு எடுக்கப்பட்டது. அந்த பகுதி விவசாயிகளின் பங்களிப்புடன் கொங்கிரீட் தூண், முட்கம்பிகள் வாங்கப்பட்டு வேலியமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

எனினும், விசமிகள் சிலர் அந்த வேலியமைக்கப்படுவதை விரும்பவில்லை. இம்மாத ஆரம்பத்தில் வேலியமைக்க ஆரம்பித்ததில் இருந்து தொடர்ச்சியாக கொங்கிரீட் தூண்களை உடைத்து வருகிறார்கள். தற்போது அங்கு வெங்காயம் பயிரிடப்பட்டுள்ள நிலையில் கடந்த ஒரு வாரமாக விசமிகளின் அட்டகாசம் கட்டுங்கடங்காமல் அதிகரித்துள்ளது. நேற்று இரவும் அங்கு விசமிகள் அட்காசம் புரிந்து, கொங்கிரீட் தூண்களை உடைத்துள்ளனர்.

உடைக்கட்ட தூண்களை வெங்காய பயிர்களின் மீதும், அங்குள்ள குடிநீர் கிணறு, விவசாய கிணறு என்பற்றிற்குள்ளும் போட்டுள்ளனர்.

விசமிகளின் அட்டகாசம் பெருகி செல்வதையடுத்து, கமக்கார அமைப்பினால் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டது. சம்பந்தப்பட்டவர்களை பிடித்து தாருங்கள் என பொலிசார் பொறுப்பற்ற விதமாக பதிலளித்தனர்.

இதையடுத்து விவசாய அமைப்பினால் விவசாய பணிப்பாளருக்கு முறைப்பாடு அனுப்பப்பட்டது. அதன் பிரதிகள் பொலிஸ்மா அதிபர், மாவட்ட அரசாங்க அதிபர், பிரதி விவசாய அமைச்சர் அங்கஜன் இராமநாதன், தவிசாளர், கிராமஅலுவலர் ஆகியோருக்கும் அனுப்ப்பட்டது. எனினும், உரிய தரப்பினர் யாரும் இதில் அக்கறை காட்டவில்லை.

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here