கறுப்பு ஜூலையின் 35வது நினைவுநாள் இன்று!

இலங்கை தமிழர் வாழ்வை புரட்டிப் போட்ட கருப்பு ஜூலை இன்றாகும். 35 வருடங்களின் முன் வரலாற்றில் ஆடிக்கலவரம் என்ற பெயரில் அடையாளப்படுத்தப்பட்ட கறுப்பு நாளின் நினைவுநாள் இன்று. தமிழர் வாழ்வையும், வளத்தையும் குறிவைத்து சிங்கள பேரினவாதிகள் ஆடிய ஊழித்தாண்டவத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டும், பல கோடி பெறுமதியாக சொத்துக்கள் அழிக்கப்பட்டும், இலங்கையின் இனமுரண்பாட்டிற்கு உத்வேகமூட்டிய சம்பவம் அரங்கேறிய நாளின் நினைவுநாள் இது.

1983ம் ஆண்டு ஜூலை மாதம் திருநெல்வேலியில் சிங்கள இராணுவத்தின் குறிவைத்து தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் 13 சிப்பாய்கள் உயிரிழந்தனர். அவர்களின் உடல்களை வைத்து அரசு கலவரத்தை தூண்டியது.

சிங்கள குண்டர்களையும் உசுப்பேற்றி, உடல்கள் அடக்கம் செய்வதையும் தாமதப்படுத்தி கலவரத்திற்கான எல்லா ஏற்பாட்டையும் அன்றைய ஜே.ஆர் அரசே ஏற்படுத்திக் கொடுத்தது.

தென்னிலங்கையில் பொருளாதாரம், அரசியல், கல்வி என சகலதுறைகளிலும் ஆதிக்கம் செலுத்திய தமிழர்களின் மீது நடத்தப்பட்ட கொடூர இனஅழிப்பு தாக்குதலில் சுமார் 3,000 இற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டனர். பல நூறு கோடி ரூபா பெறுமதியாக சொத்துக்கள் அழிக்கப்பட்டன.

இதேவேளை வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் போராளிகள், உணர்வாளர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. மூத்த போராளிகள் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உள்ளிட்ட 53 பேர் அதில் கொல்லப்பட்டனர்.

இந்த கலவரமே இலங்கை வரலாற்றை புரட்டி போட்டது. இரண்டு இனங்களும் ஒன்றுபட்டு வாழ முடியாதென்ற யதார்த்தத்தை தமிழர்களிற்கு போதித்தது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here