கேப்பாபுலவில் இராணுவம் மீது தாக்குதல்: தமிழ் சிப்பாய் வைத்தியசாலையில்!

0

முல்லைத்தீவு கேப்பாபிலவில் இராணுவத்தில் பணியாற்றும் தமிழ் இளைஞன் மீது அடையாளம் தெரியாதவர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் அவர் பலத்த காயமடைந்துள்ளார். தற்போது முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கேப்பாபுலவை சேர்ந்த செந்தூரன் (28) என்ற இளைஞன் இராணுவத்தில் இணைந்து பணியாற்றுகிறார். தற்போது பொலன்னறுவ படைமுகாமில் கடமையாற்றுகிறார். விடுமுறையில் புறப்பட்ட இளைஞன் நேற்று மாலை கேப்பாபுலவிற்கு வந்தார். அப்போது வற்றாப்பளை – கேப்பாபுலவு வீதியில் வைத்து அடையாளம் தெரியாத இளைஞர்களால் அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தமிழ் இராணுவ சிப்பாய்க்கும் கேப்பாபுலவு இளைஞர்களிற்கிடையிலும் நீண்டகாலமாக கருத்து மோதல் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு பழிவாங்கவே இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here