ரஞ்சன் ராமநாயக்கவை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்று மதியம் அவர் நுகேகொடை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது, அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பொலிசாரின் நடவடிக்கைகளிற்கு இடையூறு விளைவித்தார் என அவர் மீது பொலிசாரால் குற்றம்சுமத்தப்பட்டிருந்தது. எனினும், தான் நிவாரணம் வழங்குவதை தடுக்கவே கைது செய்யப்பட்டதாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.