காணாமல் போன அண்ணா… கடைசிவரை காணாத தங்கைகள்: வவுனியாவில் துயரச்சம்பவம்!

காணாமல் போனவர்களை கண்டறியும் போராட்டத்தை முன்னெடுத்து வந்த யுவதியொருவர் நேற்று முன்தினம் இரவு மரணமாகியுள்ளார் என்ற தகவலை தமிழ்பக்கம் காலையிலேயே செய்தி வெளியிட்டிருந்தது. 500 நாள் சுழற்சிமுறையிலான போராட்டத்தில் ஈடுபட்ட இந்த யுவதி, காணாமல் போன தனது சகோதரனை காணாமலேயே நேற்று உயிரிழந்தார். இது தொடர்பில் மேலதிகமாக சில செய்திகள் கிடைத்துள்ளன.

வவுனியா கூமாங்குளத்தில் வசிக்கும் இராசநாயகம்  டிலாந்தினி (24) என்ற யுவதியே  மரணமானார். இவர் விசேட தேவையுடையவர்.

நேற்று முன்தினம் இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார்.

இவரது சகோதரனான இராசநாயகம் ஜெனிஸ்ராஜ் என்பவர் நீர்கொழும்பில் வைத்து 2007 இல் கடத்தப்பட்டார். அதன்பின் அவர் பற்றிய எந்த தகவலும் இல்லை. 2009 இன் பின் ஜெனிஸ்ராஜை தேடி அவரது தாயாரும், சகோதரி டிலாந்தினியும் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

இரட்டை சகோதரிகளான டிலாந்தினியும் சகோதரியும் விசேட தேவையுடையவர்கள். டிலாந்தினியின் சகோதரி 2017 இல் உடல்நல குறைவால் மரணமாகியிருந்தார். 

கடத்தப்பட்ட சகோதரன், அவரை தேடி போராடிய இரண்டு சகோதரிகள் என பிள்ளைகளை இழந்த நிலையில் பெற்றோர் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here