எச்.ஐ.வி இரத்தத்தில் இளவரசி டயானாவின் ஓவியம்

பிரிட்டன் இளவரசி டயானாவின் புகைப்படம் ஒன்றை புகழ்ப் பெற்ற ஓவியரான கோர்னர் கொலின்ஸ், எச்ஐவி இரத்தம் மற்றும் வைரத் துகள்களைப் பயன்படுத்தி வரைந்துள்ளார்.

1987ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிரிட்டன் இளவரசி டயானா எச்.ஐ.வி வைரஸால் பாதிக்கப்படட நபருடன் கை குலுக்கியதன் வழி எச்.ஐ.வி பற்றி உலகம் கொண்டிருந்த தவறான எண்ணங்களுக்கு முற்றிப்புள்ளி வைத்தார்.

இச்சம்பவத்தை நினைவு கூறும் முகமாக கோர்னர் கொலின்ஸ் வரைந்த இந்த ஓவியம், சமூக ஊடகங்களில் வைரலாக பரவியிருக்கிறது.

டயானா எச்.ஐ.வி நோய்த் தொற்றிய ஒரு மனிதனின் கைகளைப் பற்றிக் கொண்டதைக் கண்டு உலகம் அன்று வியந்தது. என்றாலும் எச்.ஐ.வி பற்றிய விழிப்புணர்வு மற்றும் தவறான எண்ணம் இன்னும் மாறவில்லை என்கிறார் கோர்னர் கொலின்ஸ்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here