தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர் பரபரப்பு அறிவிப்பு: சுமந்திரனின் நடவடிக்கையால் அதிருப்தி?

0

இலங்கை தமிழரசுக்கட்சியின் பருத்தித்துறை தொகுதிக்கிளை தலைமைப்பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக சபா ரவீந்திரன் அறிவித்துள்ளார். தமிழரசுக்கட்சிக்குள் உள்ள சர்வாதிகார தனிமனித தீர்மானங்கள், ஜனநாய விரோத நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் கட்சிப்பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இவர் முன்னாள் பருத்தித்துறை நகரசபை தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.ஏ.சுமந்திரனின் கட்டுப்பாட்டில் பருத்தித்துறை பகுதி உள்ளதால், சுமந்திரனின் தன்னிச்சையான முடிவுகளையே சபா.ரவீந்திரன் குறிப்பிட்டுள்ளார் என தெரிகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here