மோட்டார் சைக்கிளில் 1400 கிலோமீற்றர் பயணித்து ஊரடங்கில் சிக்கிய மகனை மீட்ட தாய்!

தெலங்கானாவைச் சேர்ந்த தாய் ஒருவர், 1,400 கி.மீ தூரம் மோட்டார் சைக்கிளில் பயணித்து ஊரடங்கால் வீட்டுக்கு வர முடியாமல் சிக்கிக் கொண்ட மகனை மீட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தெலங்கானாவின் நிஜாமாபாத்தைச் சேர்ந்தவர் ரஸியா பேகம். இவர் தனது மோட்டார் சைக்கிளில் சுமார் 1,400 கி.மீ தூரம் பயணித்து ஆந்திர மாநிலம் நெல்லூரில் சிக்கிக் கொண்ட தனது மகனை மீட்டு வந்துள்ளார்.

ஊரடங்கு நடவடிக்கையால் வீட்டுக்கு வர முடியாமல் சிக்கிக் கொண்ட மகனின் நிலையை அறிந்த தாய், உடனடியாக தான் வசித்து வந்த போதன் பகுதி காவல்துறை அதிகாரியிடம் தனது நிலையை விளக்கி, மோட்டார் சைக்கிளில் சென்று மகனை மீட்டு வர அனுமதிக் கடிதம் கோரியுள்ளார்.

தாயின் நிலையை உணர்ந்த காவல்துறையும் அவருக்கு பயண அனுமதிச் சீட்டு வழங்கியதை அடுத்து, மோட்டார் சைக்கிளிலேயே சென்று மகனை மீட்டு வந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here