காத்தான்குடி ஆதார வைத்தியசாலை கொரோனா சிகிச்சை மையமாகியது!

காத்தான்குடி ஆதார வைத்தியசாலை கொரோனா சிகிச்சை நிலையமாக சுகாதார திணைக்களத்தால் உள்வாங்கப்பட்டதையடுத்து, வைத்தியசாலையின் சில பிரிவுகள், காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபம், காத்தான்குடி நகர சபையின் பழைய கட்டடம் என்பவற்றுக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டு வருகின்றன.

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இயங்கி வந்த வெளிநோயாளர் பிரிவு, குழந்தை பிரசவ விடுதி, கிளினிக் ஆகிய சேவைகள் மேற்படிக் கட்டடங்களுக்கு இன்று (10) மாற்றப்பட்டன.

காத்தான்குடி நகரசபை, இந்தக் கட்டிடங்களை வழங்கியுள்ளதாக நகரசபையின் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.

குருதி சுத்திகரிப்பு பிரிவு, உள நல மருத்துவப்பிரிவு என்பன காத்தான்குடி வைத்தியசாலைக் கட்டடத்திலேயே இயங்கும் என வைத்தியசாலையின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் எம்.எஸ்.எம்.ஜாபீர், காத்தான்குடி நகரசபையின் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர், வைத்தியர்கள், ஊழியர்கள், நகர சபை ஊழியர்கள் இணைந்து, விடுதி பிரிகளை மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here