ஆசிரியையும் கிராமசேவகரும் செய்த வேலை: இருவரும் வைத்தியசாலையில்!

0

வவுனியாவில் அரச அலுவலர்களிற்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இருவரும் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நெடுங்கேணி ஒலுமடு பகுதியில் கிராம சேவகருக்கும், அப்பகுதியில் உள்ள காணியை துப்புரவாக்கி கொண்டிருந்த பெண் ஆசிரியருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினையிலேயே அப்பகுதியை சேர்ந்த கிராமசேவகரும், தரணிக்குளத்தை சேர்ந்த ஆசிரியை ஒருவரும் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை வவுனியா வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here