Coronavirus updates: 100,000 ஐ நெருங்கும் உயிரிழப்பு…3வது நாளாக அமெரிக்காவில் அதிகபட்ச இழப்பு!

கோவிட்-19 (கொரோனா) வைரஸ் தாக்கத்தினால் உலகளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95,714 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மாத்திரம் உலகெங்கும் 7,234 பேர் கொரோனாவினால் பலியானார்கள்.

அமெரிக்காவில் 3வது நாளாக 2000 இற்கு நெருக்கமான உயிரிழப்பு எண்ணிக்கை பதிவானது. எனினும், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் தொற்றுக்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கையில் ஓரளவு வீழ்ச்சி தெரிகிறது.

பிரித்தானியாவிலும் நேற்று 800 இற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.

கொரோனா வைரசினால் இதுவரை 95,714 பேர் உயிரிழந்துள்ளனர். 1,603,428 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 356,440 பேர் குணமடைந்துள்ளனர்.

அமெரிக்கா

நேற்று அமெரிக்காவில் 1,900 பேர் உயிரிழந்தனர். நாட்டின் மொத்த உயிரிழப்பு 16,691 ஆக உயிரிழந்துள்ளனர். புதிதாக 33,536 பேர் தொற்றிற்குள்ளாகினர். பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 468,566 ஆக உயர்ந்துள்ளது.

சிகாகோவின் மிகப்பெரிய சிறைச்சாலையில் சுமார் 450 கைதிகள் மற்றும் ஊழியர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் அனைத்து வைத்தியசாலைகளிலும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கலிபோர்னியாவின் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கையிலும் வீழ்ச்சியேற்பட்டுள்ளதாக ஆளுநர் கவின் நியூசோம் தெரிவித்தார்.

பிரான்ஸ்

பிரான்ஸிலும் உயிரிழப்பு கட்டுங்கடங்காமல் தொடர்கிறது. நேற்று 1,341 பேர் உயிரிழந்தனர். நாட்டின் மொத்த உயிரிழப்பு 12,210 ஆக உயர்ந்தது. புதிதாக 4,799 பேர் தொற்றிற்குள்ளாகியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 117,749 ஆக உயர்ந்தது.

இங்கிலாந்து

நேற்று இங்கிலாந்தில் 881 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 7,978 ஆக உயர்ந்தது. புதிதாக 4,344 பேர் தொற்றிற்குள்ளாகியுள்ளனர். 65,077 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்பெயின்

நேற்று ஸ்பெயினில் 655 பேர் உயிரிழந்தனர். இதுவரை 15,447 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 5,002 பேர் தொற்றிற்குள்ளாகினர். இதுவரை 153,222 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தாலி

நேற்று 610 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 18,279 ஆக உயர்ந்தது. புதிதாக 4,204 பேர் தொற்றிற்குள்ளாகியுள்ளனர். இதுவரை 143,626 பேர் தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.

நாட்டை மே 3ஆம் திகதி வரை முழுமையாக பூட்ட இத்தாலி முடிவு செய்துள்ளது. இத்தாலியை முழுமையாக முடக்க மார்ச் 9ஆம் திகதி உத்தவிடப்பட்டது. அது ஏப்ரல் 13ஆம் திகதியுடன் முடியவிருந்த நிலையில், நாட்டை முடக்கும் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனி

நேற்று ஜேர்மனியில் 258 பேர் உயிரிழக்க, மொத்த உயிரிழப்பு 2,607 ஆக உயர்ந்தது. புதிதாக 4,939 பேர் தொற்றிற்குள்ளாகினர். 118,235 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெல்ஜியம்

கடந்த 24 மணித்தியாலத்தில் பெல்ஜியத்தில் 283 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 2,523 ஆக உயர்ந்தது. புதிதாக 1,580 பேர் தொற்றிற்குள்ளாகினர். இதுவரை 24,983 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஈரான்

ஈரானில் நேற்று 117 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 4,110 ஆக உயர்ந்தது. புதிதாக 1,634 பேர் தொற்றிற்குள்ளாகினர். 66,220 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர, நெதர்லாந்து 148, பிரேசில் 134, துருக்கி 96, கனடா 82, சுவீடன் 106 உயிரிழப்புக்கள் பதிவாகின.

♦சீனாவில் 42 புதிய தொற்றுக்கள் அடையாளம் காணப்பட்டன. அவற்றில் 39 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். வுஹானில் ஒரு உயிரிழப்பு பதிவாகியது.

ஆனால் அறிகுறிகளைக் காட்டாத, அடையாளம் காணபபட்ட 1,169 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

♦உகாண்டாவில் மக்கள் குழுக்களாக நடைப்பயிற்சி செய்கிறார்கள். ஆனால் வீட்டுக்குள்ளிருந்தே உடற்பயிற்சி செய்யலாம் என ஜனாதிபதி யோவரி முசவேனி, ருவிற்றரில் குறிப்பிட்டுள்ளார். தான் வீட்டிலிருந்து உடற்பயிற்சி செய்யும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here