07ம் திகதியே விடுமுறை- அச்சகத்திற்கு போனது வர்த்தமானி!

0

சர்வதேச தொழிலாளர் தினம் இம்முறை மே மாதம் 7 ஆம் திகதி கொண்டாடப்படுவதன் காரணமாக இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் பிரதியமைச்சர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார்.

அதற்கமைய மே 7 ஆம் திகதியை அரச மற்றும் விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தியுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் பிரதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

வெசாக் வாரம் அனுஷ்டிக்கப்படுவதை முன்னிட்டு இம்முறை சர்வதேசதொழிலாளர் தினத்தை பிற்போடுமாறு மகா சங்கத்தினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய சர்வதேச தொழிலாளர் தினத்தை 7 ஆம் திகதி கொண்டாட அரசு தீர்மானித்துள்ளதாகவும் பிரதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். 7ம் திகதியை விடுமுறை தினமாக அறிவிக்கும் வர்த்தமானி தயாரிக்கப்பட்டு, அரச அச்சுக்கூடத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here