பொகவந்தலாவயில் ஊரடங்கு வேளையில் கஞ்சா வியாபாரிகள் சிக்கினர்!

ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தபோது கேரள கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த இருவரை பொகவந்தலாவ பொலிசார் கைது செய்துள்ளனர். அத்துடன், ஊரடங்கு வேளையில் நடமாடிய மேலும் மூவரையும் கைது செய்துள்ளனர்.

நேற்று (8) இரவு பொகவந்தலாவ நகரில் சுற்றித் திரிந்த ஐவரை பொலிசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இருவர் கஞ்சா விற்பனையாளர்கள் என்பது தெரிய வந்தது. அவர்களிடம் விற்பனைக்கு தயாரான நிலையில் 20 பக்கட் கஞ்சா மீட்கப்பட்டது.

லொய்னோன், கிலானி தோட்டங்களை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டனர். இவர்கள் இன்று ஹட்டன் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here