சிறைச்சாலையிலிருந்த ரொனால்ட்டினோ நட்சத்திர ஹொட்டலில் வீட்டுக்காவலிற்கு மாற்றப்பட்டார்!

முன்னாள் பிரேசில் உதைபந்தாட்ட நட்சத்திரம் ரொனால்டினோவையும், அவரது சகோதரரையும் சிறையிலிருந்த விடுவித்து, வீட்டுக்காவலில் வைக்க பரகுவே நீதிமன்றமொன்று நேற்று உத்தரவிட்டது.

அசுன்சியன் நகரத்திலுள்ள ஹொட்டல் ஒன்றில் அவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருப்பார்கள்.

நீதிபதி குஸ்டாவோ அமரில்லா செய்தியாளர்களிடம் தான் உத்தரவிட்டதாக கூறினார்
“ரொனால்டினோ மற்றும் அவரது சகோதரர் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டு, ஹொட்டலில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பார்கள்” என்றார்.

பரகுவேக்குள் போலி பாஸ்போர்ட் மூலம் நுழைய முயன்ற குற்றச்சாட்டில் ஒரு மாதத்தின் முன்னதாக ரொனால்ட்டோ, அவரது சகோதரர், மற்றும் அவரது நிதி மேலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

பரகுவேயின் முன்னாள் கால்பந்து கூட்டமைப்பின் தலைவருக்கு சொந்தமாக சொகுசு ஹொட்டல் பல்மரேகா, தலைநகரின் வரலாற்று மையத்தில் அமைந்துள்ளது. வரலாற்று மையமொன்றில் புதுப்பிக்கப்பட்ட இந்த ஹொட்டலில் 107 அறைகள் உள்ளன.

“அவர்களை தமது சொந்த செலவில் ஹோட்டலில் வீட்டுக்காவலில் தங்க வைத்திருப்பதாக ஹொட்டல் மேலாளர்கள் வழங்கிய உத்தரவாதம் என்னிடமுள்ளது“ என நீதிபதி குறிப்பிட்டார்.

ரொனால்ட்டோவின் பிணை கோரிக்கையை பராகுவேவின் மேல்முறையீட்டு நீதிமன்றம் கடந்த மாதம் தள்ளுபடி செய்திருந்தது. இதனால், இரண்டு முறை உலகின் சிறந்த வீரர் விருது வென்ற ரொனால்ட்டோ தனது 40வது பிறந்தநாளை சிறைச்சாலையில் கழித்தார்.

பரகுவேயின் தலைநகரம் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் லொக் டன் செய்யப்பட்டுள்ள நிலையில், நீதிபதி தனது தீர்ப்பை செல்போன் அழைப்பில் ரொனால்ட்டோ சகோதரர்கள், சட்டத்தரணிகளிற்கு தெரிவித்தார்.

ஹெட்போன் வழியாக நீதிபதியின் தீர்ப்பை அறிந்த ரொனால்ட்டோ, கட்டை விரலை உயர்த்தி, புரிந்து கொண்டதாக சைகை காண்பித்தார்.

போலி பாஸ்போர்ட் விவகாரம்

ரொனால்ட்டோவும், சகோதரர் ரொபர்டோ டி அசிஸ் மொரேராவும் – அவரது வணிக மேலாளரும் – பிரேசிலில் இருந்து விமானத்தில் வந்து எந்த பிரச்சனையும் இல்லாமல் அண்டை நாடான பரகுவேயில் மார்ச் 4 அன்று தரையிறங்கினர். எனினும், சிறிது நேரத்தில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டனர்.

அசுன்சியனுக்கு ரொனால்டினோ வந்திறங்கியதும், சுமார் 2,000 சிறுவர்கள் கலந்து கொண்ட ரொக் ஸ்டார் வரவேற்பு வழங்கப்பட்டிருந்தது.

பின்தங்கிய குழந்தைகளிற்காக பணிபுரியும் தொண்டு நிறுவனம் ஒன்றினால் பாஸ்போர்ட் தமக்கு வழங்கப்பட்டதாகவும், அதன் நிகழ்வில் கலந்து கொள்ளவே வந்ததாகவும் ரொனால்ட்டினோ தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கில் மேலும் பதினான்கு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது பண மோசடி தொடர்பான விசாரணையாக விரிவடைந்துள்ளது.

ரொனால்டினோவினால் குறிப்பிடப்பட்ட அறக்கட்டளையுடன் தொடர்புடைய தொழிலதிபருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எல்லா காலத்திலும் மிகச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் ரொனால்டினோ, பிரேசிலின் 2002 உலகக் கோப்பை வெற்றியின் நட்சத்திரமாக இருந்தார். மேலும் ஐரோப்பியாவின் முக்கிய அணிகளான பார்சிலோனா, பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் மற்றும் ஏ.சி.மிலான் ஆகிய அணிகளிற்காகவும் விளையாடினார்.

பொலிஸ் தலைமையகத்தின் மிகவும் பிரபலமான கைதியாக அவர் பெயரிடப்பட்டுள்ளார். சிறைச்சாலைக்குள் சமீபத்தில் நடந்த கைதிகளின் ஃபுட்சல் போட்டியில் வென்ற அணிக்கு ஒரு கோப்பையை வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here