பிரபல தயாரிப்பாளரின் மகளுக்கும் கொரோனா!

ஷாருக்கான், தீபிகா படுகோன் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தைத் தயாரித்த கரிம் மொரானியின் மகளுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

கரோனா வைரஸால் இந்தியாவில் இதுவரை 4,200 பேருக்கு மேல் பாதிப்க்கப்பட்டுள்ளனர். 111 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை எக்ஸ்பிரஸ், ரான் ஒன் போன்ற பிரபலமான ஹிந்திப் படங்களைத் தயாரித்தவர் கரிம் மொரானி. இவருடைய மகள் ஷாஷாவுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் ஷாஷாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஊரடங்கு உத்தரவு அமல்படுத்துவதற்கு முன்பு ஆஸ்திரேலியாவிலிருந்து ஷாஷா திரும்பினார். தற்போதைய நிலையில், ஜுஹுவில் உள்ள வீட்டில் கரிம் மொரானி குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here