கொரோனா அறிகுறிகளுடன் அழைத்துச் செல்லப்பட்ட வயோதிபப் பெண் உயிரிழப்பு!

கொரோனா அறிகுறிகளுடன் அவசர நோயாளர் காவு வண்டி மூலம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வயோதிபப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (6) மாலை நடந்த இந்த சம்பவத்தில் நாவுல பகுதியை சேர்ந்த 75 வயதான பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.

தீவிர சுவாசக்கோளாறு, காய்ச்சல், இருமலுடன் அவதிப்பட்ட வயோதிபப் பெண், வைத்திய சிகிச்சை பெறாமலிருந்தார். கிராமசேவகரின் கவனத்திற்கு இந்த விடயம் தெரிவிக்கப்பட்டதையடுத்த, அவர் தலையிட்டு 1990 இலக்க நோயாளர் காவு வண்டிக்க அறிவித்து, வயோதிபப் பெண்ணை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தார்.

எனினும், வைத்தியசாலை செல்லும் வழியிலேயே அந்த பெண் உயிரிழந்து விட்டதாக தம்புள்ளை ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் பிரதீப் திசனாயக்க தெரிவித்துள்ளார்.

மூதாட்டியின் வீட்டில் மேலுமிருவர் வசித்து வந்துள்ளனர். நீர்கொழும்பில் பணியாற்றிய மூதாட்டியின் மகன், கடந்த 10 நாட்களின் முன்னரே வீடு திரும்பியிருந்தார். வீட்டிலுள்ள இருவரும் கொரோனா அறிகுறிகளுடன் உள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த பெண்ணின் இரத்த மாதிரி கண்டி போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உடல் மாத்தளை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here