ஆவா குழு தலைவனின் பிறந்தநாள் கொண்டாட்டம்; ரௌடிகள் சுற்றிவளைப்பு: மூவர் கைது! (PHOTOS)

ஆவா குழு தலைவனின் பிறந்த நாளில் கலந்து கொண்ட மூன்று ரௌடிகள் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.

அளவெட்டி பகுதியில், ஆவா குழு தலைவனின் பிறந்தநாள் நிகழ்வு நடந்தது. இதில் சுமார் 20 வரையான ரௌடிகள் பங்குகொண்டிருந்தனர். ஊரடங்கு வேளையிலும் ரௌடிகள் ஒன்றுகூடி, மது விருந்தில் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த தகவல் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்ததும், பொலிசாருடன் இணைந்து ரௌடிகளை சுற்றிவளைத்தனர். மது போதையில் இருந்தாலும், ஏனைய ரெடிளகள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.மூன்று ரௌடிகள் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.

ரௌடிகளின் மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டது. கைதான ரெடிளகளிடம் நடத்தப்படும் விசாரணையின்படி, தப்பியோடிய ரௌடிகளை பொலிசார் தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here