சந்தைகள்,மொத்த விற்பனை நிலையங்களில் சுற்றிவளைப்பு!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு தளர்த்தப்பட்ட காலத்தில் பிரத்தியேகமான சந்தைகள் மற்றும் மொத்த விற்பனை நிலையங்களில் பாவனையாளர்களைப் பாதுகாக்கும் வகையிலான சுற்றிவளைப்புகள் அம்பாறை மாவட்டத்தில் பரவலாக இடம்பெற்று வருகின்றன.

இதனடிப்படையில் திங்கட்கிழமை(6) ஊரடங்கு தளர்த்தப்பட்ட காலத்தில் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பிரத்தியேகமான சந்தைகள் மற்றும் மொத்த விற்பனை நிலையங்களில் பாவனையாளர்களைப் பாதுகாக்கும் வகையிலான சுற்றிவளைப்புகள் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்கவின் கட்டளைக்கமைவாக மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது பிரத்தியேகமாக அமைககப்பட்ட சந்தைகள் மற்றும் மொத்த விற்பனை நிலையங்களில் சுற்றி வளைப்புகளை மேற்கொண்டதுடன் பொது மக்களுக்கு கட்டுப்பாட்டு விலைகளில் அததியாவசியப் பொருள்கள் கிடைப்பதனை உறுதிப்படுத்தும் செயற்பாடுகளிலும் பொருட்களின் விலைப்பட்டியலை காட்சிப்படுத்தவும் நடவடிக்கை எடுத்ததோடு காட்சிப்படுத்தாத உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த சுற்றிவளைப்புகள் மரக்கறி விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் ஏனைய விற்பனை நிலையங்களிலும் மேற்கொள்ளப்பட்டன.

அரசாங்க அதிபரின் பணிப்புரைக்கமையநுகர்வோர் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட பொறுப்பதிகாரி என்.எம்.எம்.சப்ராஸ் நெறிப்படுத்தலில் மேற்கொள்ளப்படும் இந்நடவடிக்கைள் மக்களுக்கு தேவையான பொருள்கள் யாவும் கிடைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் இச்செயற்பாடுகள் தொடர்ச்சியாகவும் மேற்கொள்ளபபட்டு வருவதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அம்பாரை மாவட்ட புலானாய்வு உத்தியோகத்தர் இஷட்.எம் ஸாஜீத் தெரிவித்தார்.

இதன்போது கல்முனை மாநகர சபையின் வருமான வரி உத்தியோகத்தர்கள், இராணுவத்தினரும் இவ் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் . இவர்கள் கல்முனை இமருதமுனை ,சாய்ந்தமருது , மாளிகைக்காடு போன்ற பல பிரதேசத்தில் திடீர் சோதனை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-பா.டிலான்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here