விஷ வாயு தாக்குதலால் பாதிக்கப்பட்ட ரஷ்ய உளவாளி மகள் யூலியா வீடு திரும்பினார்

பிரிட்டனில் விஷ வாயு தாக்குதலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ரஷ்ய உளவாளியின் மகள் யூலியா வீடு திரும்பினார்.

இதுகுறித்து சாலிஸ்பரியில் உள்ள மருத்துவமனை துணை தலைமை செயல் அதிகாரி கிறிஸ்டின் பிளான்ஷர்டு நேற்று கூறும்போது, “யூலியாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் தனிமையில் இருக்க விரும்பியதையடுத்து அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளோம். எனினும் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படும். யூலியாவின் தந்தை ஸ்கிரிபால் உடல்நிலை மெதுவாக தேறி வருகிறது. அவரும் விரைவில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார் என நம்புகிறோம்” என்றார்.

ரஷ்ய உளவுப் பிரிவில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர் செர்ஜி ஸ்கிரிபால் (66). பிரிட்டன் உளவு அமைப்புக்கு உளவு பார்த்ததாகக் கூறி இவருக்கு ரஷ்யா சிறை தண்டனை வழங்கியது. பின்னர் விடுதலை செய்யப்பட்ட இவர் பிரிட்டன் குடியுரிமை பெற்று சாலிஸ்பரி பகுதியில் வசித்து வந்தார். கடந்த மார்ச் 4-ம் திகதி ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் யூலியா மீது விஷ வாயு தாக்குதல் நடத்தப்பட்டது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here