யாழ்ப்பாண அரச கால்நடை வைத்தியசாலை உடைப்பு

இணுவிலில் அமைந்துள்ள யாழ்ப்பாண அரச கால்நடை வைத்தியசாலை திருடர்களால் உடைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றுற்றது. ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ளதால் குறித்த கால்நடை வைத்தியசாலை மூடப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி வைத்தியசாலையின் பிரதான கதவை உடைத்து திருடர்கள் உள்நுழைந்துள்ளனர்.

இதனை அவதானித்த அயலவர்கள் அரச கால்நடை வைத்தியசாலைக்குள் செல்ல முற்பட்டபோது திருடர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்நிலையில் கால்நடை வளர்ப்போர் சங்க பிரதிநிதி காந்தன் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பாகஜதீபனிற்கும் கால்நடை வைத்திய அதிகாரிக்கும் சம்பவம் தொடர்பில் அறிவித்துள்ளார். ஊரடங்கு நேரத்திலும் உடனடியாக அங்கு சென்ற கஜதீபன் நிலைமைகள் தொடர்பில் அவதானித்து சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

இதனையடுத்து அங்கு வந்த பொலிஸார் அரச கால்நடை வைத்தியசாலை உடைக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். குறித்த கால்நடை வைத்தியசாலையில் காலநடை மருந்துகள் மற்றும் அலுவலக கணணிகள் உட்பட்ட பெறுமதியான பொருட்கள் உள்ளதாகவும் கால்நடை வளர்ப்போர் சங்க பிரதிநிதி காந்தன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here