கொட்டகலையில் கெப் ரக வாகனம் குடைசாய்ந்து விபத்து

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் நேற்று (5) இரவு கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் கெப்ரக வாகனம் ஒன்று பிரதான வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ் செய்த இருவர் சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தபளை பகுதியிலிருந்து கொழும்பு பகுதியை நோக்கி மரக்கறி வகைகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த கெப்ரக வாகனமே மண்மேட்டில் மோதுண்டு இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

க.கிஷாந்தன்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here