ஊரடங்கு உத்தரவினால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ் அகதிகளிற்கு நிவாரணம்!

மதுரை உச்சப்பட்டியில் அமைந்துள்ள ஈழத்தமிழர் அகதிகள் முகாமில் வசிக்கும் மக்களிற்கு மார்க்சிஸ்ட் பொதுவுடைமை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தலைமையில் உதவிப்பொருட்கள் வழங்கப்பட்டள்ளன.

இது தொடர்பில் சு.வெங்கடேசன் தனது சமூக வலைத்தளத்தில் இட்ட பதிவில்-

மதுரை உச்சப்பட்டி யில் அமைந்துள்ள ஈழத்தமிழர் அகதிகள் முகாமில் 451 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களில் பெரும்பாலானோர் அன்றாடம் கூலி வேலைசெய்து வாழ்பவர்கள்.

ஊரடங்கு உத்தரவினால் அனைவரும் வேலை இழந்து மிகவும் கஷ்டத்தில் இருக்கின்றனர். ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று கடந்த வியாழக்கிழமை நண்பர்கள் சிலர் கூறினர்.

உடனடியாக முகாமுக்கு பொறுப்பான வட்டாட்சியரிடம் பேசினேன். மறுநாளே உதவித்தொகையும், ரேசன் பொருட்களும் கொடுப்பதாக தெரிவித்தார். முறையாக கொடுக்கவும் செய்தார்.

இதன் தொடர்ச்சியாக இந்த குடும்பங்கள் அனைத்துக்கும் ஒரு வாரத்துக்கு தேவையான காய்கறிகளை கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டோம்.

மதுரை சென்டரல் மார்க்கெட் காய்கறி மற்றும் அலுகும் பொருள் வியாபாரிகள் சங்கத்தலைவர் திரு. மனுவேல் ஜெயராஜிடம் பேசினேன். “சுமார் ஒன்றரை லட்சம் பெறுமானமுள்ள காய்கறிகளை நாங்களே தருகிறோம்” என்று மகிழ்வோடு முன்வந்தார்.

இன்று காலை அதனைப்பெற்று இரண்டு வாகனத்தில் ஏற்றி முகாமுக்கு கொண்டுவரும் பொறுப்பினை நண்பர் மதனும் அவருடைய தோழர்களும் செய்தார்கள்.

நானும் விவசாய சங்கத்தலைவர் தோழர் இராஜேந்திரனும் கலந்துகொண்டு பொருட்களை கொடுத்தோம்.

முகாமில் உள்ள அனைத்து குடும்பத்துக்கும் வீடு வீடாகச் சென்று
அதனை கொடுக்கும் பொறுப்பினை வா நண்பா அமைப்பினைச் சார்ந்த தன்னார்வலர்கள் செய்து முடித்தார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here