இந்தவார ராசிபலன்கள் (5.4.2020 – 11.42020)

சுக்கிரன், புதன், செவ்வாய் அளப்பரிய நன்மை வழங்குவர். சுபச்செலவுகள் ஏற்படலாம். புதிய மாற்றங்கள் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். அரசுத் துறையில் பணிபுரியும் சிலருக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். உறவினர் மத்தியில் உங்களின் செல்வாக்கு கூடும். நீண்ட நாள் கனவு நிறைவேறும். பணவரவு திருப்பதிகரமாகும். உஷ்ணம் தொடர்பான நோய்கள் வரலாம். பணியிடத்தில் தற்பெருமை கொள்ளாமல் வேலையில் கவனமாக இருப்பது நன்மை தரும்.

சந்திராஷ்டமம் : 10.4.2020 இரவு 8:43 – 11.4.2020 நாள் முழுவதும்
பரிகாரம் : சூரிய வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

சுக்கிரன், செவ்வாய், சூரியன் ஆகியோர் அற்புத அமைப்பில் உள்ளனர். எதிர்பாராத நல்ல திருப்பங்களை சந்திப்பீர்கள். முயற்சிக்கு ஏற்ற பலன்கள் இருக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது. எதிலும் தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள். சுயதொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்வதை தவிர்த்து விடுங்கள். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துங்கள். உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பது நன்மை தரும். பெண்கள் பிள்ளைகளின் நலனில் மிகுந்த அக்கறை கொள்வர்.

பரிகாரம் : சிவன் வழிபாடு மனஅமைதி தரும்.

குரு, சூரியன், புதன் ஆகிய கிரகங்கள் கூடுதல் நற்பலன்களை தருவர். கவர்ச்சி அம்சம் அதிகரிக்கும். அலுவலகத்தில் சக பணியாளர்கள் ஆதரவுடன் நடந்து கொள்வார்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை கூடும். ஆடம்பரச் செலவைத் தவிர்க்கவும். அரசாங்க உத்தியோகம் கிடைக்க வாய்ப்புள்ளது. தந்தையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். ஆன்மிக விஷயங்களில் நாட்டம் கொள்வீர்கள். நல்லவர் யார் கெட்டவர் யார் என்று அறியும் வாய்ப்பு ஏற்படும். மாணவர்கள் படிப்புடன் விளையாட்டிலும் சிறந்து விளங்குவர்.

பரிகாரம் : துர்கையை வழிபட்டால் துன்பம் அகலும்.

சுக்கிரன், ராகு, கேது, சனி ஆகிய கிரகங்கள் சாதகமாக உள்ளனர். எதிர்பாலினத்தவரால் நன்மை உண்டாகும். தந்தை வழி உறவினர்களின் உதவி கிடைக்கும். மகன்/மகளிடம் இருந்து எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். நண்பர்களுடன் விருந்தில் கலந்து கொள்வீர்கள். குடும்பப் பெரியவரின் ஆலோசனை மிகுந்த பயனளிக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் பரிவு காட்டுவார்கள். பகை பாராட்டிய உறவினர்கள் இணைந்து கொள்வார்கள். மாணவர்கள் அதிக கவனத்துடன் படிப்பது நல்லது.

பரிகாரம் : விஷ்ணு வழிபாடு நன்மை அளிக்கும்.

ராகு, குரு, புதன் ஆகிய கிரகங்கள் நன்மை செய்யக் காத்திருக்கின்றனர். பணவரவு திருப்திகரமாகும். நிலுவைக் கடன் வசூலாகும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி பெருமளவு கிடைக்கும். உழைப்புக்கேற்ற ஊதியம் கட்டாயம் இருக்கும். உஷ்ணம் சம்பந்தப்பட்ட ஆரோக்கியப் பிரச்னை ஏற்படக்கூடும். குழந்தைகளால் மிகுந்த பெருமை உண்டாகும். பெண்கள் குடும்ப நலனில் அக்கறை கொள்வர். எதிர்பார்த்த முன்னேற்றம் தாமதமாகக்கூடும். மாணவர்கள் தங்களின் அயராத முயற்சியினால் படிப்பில் வெற்றி காண்பர்.

பரிகாரம் : விநாயகரை வணங்கினால் விரைந்து உதவுவார்.

செவ்வாய், சுக்கிரன், ராகு ஆகிய கிரகங்கள் சாதகமான நிலையில் உள்ளனர். அலைச்சலும் உழைப்பும் வீண் போகாமல் பலன் தரும். உடன்பிறந்தவர்களால் ஏற்பட்ட பிரச்னைகள் சரியாகும். சவால்களை எதிர்கொண்டு கடுமையாக உழைத்து வெற்றி காண்பீர்கள். தாயின் அன்பு, ஆசியை பெறுவீர்கள். குடும்பத்தில் சில நெருக்கடிகள் ஏற்பட்டு பின் மறையும். அலுவலகத்தில் சகபணியாளர்கள் உதவிகரமாக இருப்பார்கள். தந்தையின் செல்வாக்கால் கூடுதல் நன்மைகள் ஏற்படும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டை நடத்துவர்.

பரிகாரம் : பெருமாளை வழிபட்டால் துன்பங்கள் விலகும்.

செவ்வாய், சுக்கிரன் ஆகியோர் நன்மை செய்யக் காத்திருக்கின்றனர். தந்தை வழி உறவினர்களுடன் இருந்த பிரச்னைகள் தீரும். குடும்பப் பெரியவரின் ஆசியை பெறுவீர்கள். புதிய நட்புகளை நம்பி பெரிய முடிவுகள் எதையும் எடுக்கவேண்டாம். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் தோன்றாதபடி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. விலை உயர்ந்த ஆபரணங்கள் விஷயத்தில் சற்று கவனமாக இருங்கள். யாரையும் அலட்சியமாக நடத்த வேண்டாம். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கை அடைய காலஅவகாசம் தேவைப்படும்.

பரிகாரம் : பைரவர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

சுக்கிரன், சூரியன், செவ்வாய் ஆகியோர் அருமையான அமைப்பில் உள்ளனர். சிலருக்கு வீடு மாற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம். மனைவியின் ஆலோசனைப்படி நடப்பது நன்மை அளிக்கும். மன தைரியம் அதிகரிக்கும். உடல் நலனில் கூடுதல் கவனம் தேவை. சொத்துகளைப் பாதுகாக்கும் பொறுப்பை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். தாழ்வு மனப்பான்மை நீங்கும். வழக்கு, விவகாரத்தில் நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் அனுபவசாலி ஒருவரால் கூடுதல் லாபம் பார்ப்பீர்கள்.

பரிகாரம் : குரு வழிபாடு சுபவாழ்வு தரும்.

செவ்வாய், குரு, ராகுவால் கூடுதல் நன்மைகள் உண்டு. எதிலும் தன்னம்பிக்கையோடு இருப்பீர்கள். சமூகத்தில் முக்கிய பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். குழந்தைகளின் குறைகளை பக்குவமாக சுட்டிக் காட்டித் திருத்த வேண்டும். சமூக வலைதளங்களின் மூலம் முக்கியப் பிரபலங்களின் நட்பை பெறுவீர்கள். கூட்டுத் தொழிலில் கவனம் தேவை. அலுவலகத்தில் சகபணியாளர்களால் பாராட்டப்படுவீர்கள். கடந்த காலத்தில் உங்களை துாற்றியவர்கள் போற்றுவார்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் சில புதிய மாற்றங்களை சந்திப்பீர்கள்.

பரிகாரம் : அனுமன் வழிபாடு வெற்றி தரும்.

சனி, செவ்வாய் ஆகிய கிரகங்களால் நன்மை ஏற்படும். தாயாருக்கு அரசாங்க வகையில் உதவி கிடைக்கும். எதிரிகளை அடையாளம் காண்பீர்கள். வீண்செலவுகள் குறையும். யாரையும் எதிரியாகப் பார்க்க வேண்டாம். சகோதரர்களின் வாழ்வு உயரும். உடல் நலனில் அக்கறை தேவை. பணம் கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது. பேச்சினால் நன்மை உண்டாகும். குழந்தைகளின் செயல்கள் மகிழ்ச்சியை தரும். திட்டமிட்ட பணிகளில் சிறு அளவில் தாமதம் ஏற்படக்கூடும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடப்பதற்கான சூழல் உருவாகும்.

பரிகாரம் : தட்சிணாமூர்த்தி வழிபாட்டால் நன்மை கிடைக்கும்.

சனி, கேது, சூரியன் வியத்தகு அளவில் நன்மைகளை வழங்குவர். பணம் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் கூடும். வழக்கில் எதிர்பார்த்த நல்ல தீர்ப்பு வரும். தந்தையின் உடல் நலம் சீராகும். பூர்வ சொத்து பற்றிய பிரச்னை முடிவுக்கு வரும். செலவு குறைந்து வருமானம் அதிகரிக்கும். எல்லோரிடமும் இதமாகப் பேசி நினைத்த செயல்களை முடிப்பீர்கள். சான்றோர்களின் ஆசி கிடைக்கும். குடும்பத்தினருடன் விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள்.

சந்திராஷ்டமம் : 6.4.2020 மாலை 3:35 – 8.4.2020 மாலை 5:53 மணி
பரிகாரம் : சாஸ்தா வழிபாடு நன்மை அளிக்கும்.

செவ்வாய், குரு, ராகு செல்வ வளங்களை தருவர். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். திடீர் பணவர உண்டு. தாயின் உடல்நலனில் அக்கறை அவசியம். நெருங்கிய உறவினர்களுடன் சிறிய அளவில் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். பேச்சில் கவனம் தேவை. திட்டமிட்ட பயணங்கள் ரத்தாகி சிறிய ஏமாற்றத்தைக் கொடுக்கும். உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்கள் வரக்கூடும். சரியான நேரத்தில் சாதுர்யத்துடன் செயல்பட்டு நல்ல முடிவுகளை எடுப்பீர்கள்.

சந்திராஷ்டமம் : 8.4.2020 மாலை 5:54 – 10.4.2020 இரவு 8:42 மணி
பரிகாரம் : அம்பிகை வழிபாடு இடர் நீக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here