21 நாள் லொக் டவுண்: நடிகைகள் என்ன செய்கிறார்கள்?

கொரோனா ஊரடங்கால் நடிகைகள் வீட்டில் முடங்கி உள்ள நிலையில் இப்போது தான் வீட்டு வேலைகளையும் ஒவ்வொன்றாக கற்று வருகிறார்கள்.

குறிப்பாக பாத்திரம் கழுவது, சமைப்பது, வீட்டை சுத்தம் செய்வது, தோட்ட வேலைகள் செய்வது என தங்களது பொழுதை கழித்து வருகின்றனர். சில நடிகைகள் ஆட்டம், பாட்டு என குதூகலிக்கின்றனர்.

த்ரிஷா

நடிகை த்ரிஷா சில நாட்கள் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இப்போது டிக்-டாக்கில் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

நிதி அகர்வால்

ஜெயம் ரவியின் பூமி படத்தில் நடித்துள்ள நடிகை நிதி அகர்வால் சமூகவலைதளத்தில் பதிவிட்டிருப்பதாவது : சிலர் வீட்டில் உட்கார்ந்து கொண்டு வெறுக்கத்தக்க வகையிலான தகவல்களை பரப்பி வருகின்றனர். நான் என் ஓய்வு நேரத்தில் வீட்டை சுத்தம் செய்தல், உடற்பயிற்சி, தியானம், ஓவியம் வரைவதல், உணவு சமைத்தல், புத்தகம் வாசிப்பு, பார்க்க தவறிய படங்களை பார்க்கிறேன், செல்ல பிராணிகளுடன் பொழுதை கழிப்பது, என் அறிவு திறனை வளர்க்கும் புதிய விஷயங்களை கற்பது, போன்ற பல விஷயங்களை செய்து வருகிறேன் என பதிவிட்டுள்ளார்.

சம்யுக்தா ஹெக்டே

கோமாளி, பப்பி போன்ற படங்களில் நடித்த நடிகை சம்யுக்தா ஹெக்டே சமூகவலைதளத்தில் தனது பெற்றோர்களுடன் நேரத்தை செலவிடுவதுடன் அவர்களுக்கும் உடற்பயிற்சி அளித்து அதை வீடியோ பதிவிட்டார். அதோடு பெல்லி டான்ஸில் அசத்தும் இவர் நேரம் கிடைக்கும் போதெல்லாம் குட்டையான உடையணிந்து கொண்டு பெல்லி நடனத்தை ஆடி ரசிகர்களை உசுப்பேற்றி விடுகிறார்.

ஸ்ரேயா

வெளிநாட்டு காதலர் ஆண்ட்ரி கொஸ்சிவ்வை 2018ல் யாருக்கும் சொல்லாமல் திடீர் திருமணம் செய்தார் நடிகை ஸ்ரேயா. தொடர்ந்து படங்களிலும் நடிக்கிறார். கொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கி உள்ள இவர், ஆண்ட்ரியை ஏன் திருமணம் செய்தேன் என சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ஆண்ட்ரி பாத்திரம் கழுவதை காண்பித்து, ஒவ்வொரு கணவரும் தங்களது மனைவிக்கு இப்படி உதவுங்கள் என கூறி, நச் என்று ஒரு உதட்டு முத்தமும் கொடுத்துள்ளார். இது வைரலானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here