இணையத்தை கலக்கும் த்ரிஷாவின் வீடியோ

“Savage” என்ற ஆங்கில பாடலுக்கு டிக்-டாக் செய்து த்ரிஷா வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

கொரோனா அச்சத்தால் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வீட்டிற்குள் இருக்கும் பிரபலங்கள் பலரும் பொழுது போக்க வழியில்லாததால் டிக்-டாக்கில் இணைந்து டைம் பாஸ் செய்து வருகின்றனர்.

அப்படி சமீபத்தில் டிக்-டாக்கில் இணைந்த திரைப்பிரபலம் சிம்ரன். அஜித்துடன் சிம்ரன் நடித்த வாலி பட பாடலுக்கு அசத்தலாக டிக்-டாக் செய்து, ரசிகர்களை கிறங்கடித்தார். இந்த லிஸ்டில் இப்போது புதிதாக இணைந்திருக்கிறார் நடிகை த்ரிஷா.

மணிரத்னத்தின் கனவு படமான “பொன்னியின் செல்வன்” படத்தில் த்ரிஷா நடிக்க உள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் அனைத்து விதமான படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தற்போது கிடைத்துள்ள இந்த பொன்னான நேரத்தை ரசிகர்களுடன் சேர்ந்து செலவிட முடிவு செய்த த்ரிஷா, டிக்-டாக்கில் இணைந்துள்ளார்.

“Savage” என்ற ஆங்கில பாடலுக்கு டிக்-டாக் செய்து த்ரிஷா வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் தாறுமாறு வைரலாகி வருகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here