கிரிக்கெட்டில் மழை பாதிப்பு விதிமுறையை கண்டுபிடித்த லூவிஸ் மரணம்

டக்வேர்த் லூவிஸ் முறையை உருவாக்கியவர்களில் ஒருவரான இங்கிலாந்தை சேர்ந்த டோனி லூவிஸ் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மழை காரணமாக பாதிக்கப்படும் பட்சத்தில் டக்வேர்த் லூவிஸ் விதிமுறைப்படி 2 வதாக துடுப்பெடுத்தாடும் அணிக்கு புதிய வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்படும். சிக்கலான இந்த வெற்றி இலக்கு கணக்கீட்டு முறையை கணிதவியல் நிபுணர்கள் பிராங்க் டக்வேர்த், டோனி லூவிஸ் ஆகியோர் இணைந்து உருவாக்கினார்கள். 1997 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த டக்வேர்த் லுவிஸ் விதிமுறையை 199 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டது.

தற்போது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் இந்த விதிமுறை பின்பற்றப்படுகிறது. 2014 ஆம் ஆண்டில் கணிதவியலாளர் ஸ்டீவன் ஸ்டெர்ன் என்பவரால் நவீன கிரிக்கெட்டுக்கு ஏற்ப இந்த விதிமுறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. டக்வோர்த் லூவிஸ் முறையை உருவாக்கியவர்களில் ஒருவரான இங்கிலாந்தை சேர்ந்த டோனி லூவிஸ் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 78 ஆகும். அவரது மறைவுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இரங்கல் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here