சரசாலை ஆலயத்தின் முன்மாதிரி: தொடரும் நிவாரப்பணி!

சரசாலை காளி கோவிலின் முன்மாதிரியான செயற்பாட்டை தமிழ்ப்பக்கம் உலகிற்கு வெளிக்கொண்டு வந்ததையடுத்து புலம்பெயர் நாடுகளில் வாழுகின்ற அடியவர்கள் நிவாரண பணிகளுக்கான நிதியினை அள்ளி வழங்கி வருகின்றனர்.

தென்மராட்சியின் சரசாலை காளி கோவில் அறப்பணி சபையானது நாட்டில் நிலவும் சூழ்நிலைகாரணமாக தமது வருடாந்த மணவாளக்கோலத் திருவிழாவினை நிறுத்தி அத்திருவிழா உபயநிதியில் இருந்து சுமார் 150 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கியிருந்தது. இந்த ஆலயத்தின் முன்மாதிரியான குறித்த செயற்பாட்டை தமிழ்ப்பக்கம் உலகுக்கு வெளிக்கொண்டு வந்திருந்தது. இச்செய்தியை பார்த்த புலம்பெயர் நாடுகளில் வாழுகின்ற ஆலயத்தின் அடியவர்கள் நிவாரணப் பணிகளுக்காக சுமார் இரண்டு இலட்சம் ரூபாவினை வழங்கியுள்ளார்கள்.

இந்நிதியில் இருந்து சரசாலை தெற்கு ஜே/316 மற்றும் சரசாலை வடக்கு ஜே/317 கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் சுமார் 230 குடும்பங்களுக்கு நிவாரண பொதிகளை வழங்கி வைத்தனர்.

மேலும் அக்கிராமத்தில் இருக்கின்ற கர்ப்பிணி தாய்மார்களுக்கான போசாக்கு உணவுப் பொதிகளையும் அப்பகுதி குடும்பநல உத்தியோகத்தரிடம் வழங்கி வைத்தனர்.

சரசாலை காளி கோவில் அறப்பணி சபை நிர்வாகத்தில் இளைஞர்களை உள்ளீர்த்து வெளிப்படைத் தன்மையோடு முனமாதிரியாக செயற்படுவதினைப் போன்று ஏனைய ஆலயங்களும் பொது அமைப்புக்களும் செயற்பட்ட பல்வேறு தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க முன்வருவார்கள் என்று தென்மராட்சியின் நலன்விரும்பிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here