தந்தையின் நினைவாக வடமராட்சியில் உணவுப்பொருள் வழங்கிய புலம்பெயர் தமிழர்!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காலப்பகுதியில் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்களிற்கு புலம்பெயர் தமிழர்கள் பலர் அறப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்தவகையில், நோர்வே நாட்டில் வசிக்கும் குட்டி என்பவர் தனது தந்தையான வ.தம்பிராசாவின் ஒன்பதாவது வருட நினைவு நாளான நேற்று (01) துன்னாலை தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய மூன்று கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் ஐந்நூறிற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு உணவுப்பொதிகளை வழங்கியிருந்தார்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரிசி-4Kg , மா- 2Kg , பருப்பு -1Kg
உள்ளடங்கலான உணவுப்பொருள் பொதிகள் நேற்றும், இன்றும் வழங்கப்பட்டு வருகிறது.

அந்தப்பகுதி மக்கள் அவருக்கு நன்றி தெரிவிப்பதுடன், பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here