சுவிஸ் போதகரின் சாரதியும், சமையல் பெண்ணும் இன்று வெலிக்கந்தைக்கு!

யாழில் நேற்று இனம்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் பொலன்னறுவ, வெலிக்கந்தை வைத்தியசாலைக்கு மாற்றப்படுகிறார்கள்.

சுவிஸ் போதகர் சற்குணம் யாழில் நடத்திய ஆராதனையால் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சுவிஸ் போதகருடன் நெருக்கமாக இருந்தவர்கள் பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்ட 20 பேரில் பத்து பேருக்கு நேற்று பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், மூவர் தொற்றுக்குள்ளானது உறுதியானது. முன்னதாக ஒருவருக்கு தொற்று உறுதியென்ற தகவல் வழங்கப்பட்டது.

இதன்படி, அரியாலை போதகருக்கு தொற்று உறுதியானதையடுத்து அவர் நேற்றிரவே வெலிகந்தை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

இதன்பின்னர், சுவிஸ் போதகரின் சாரதி மற்றும் சமையல் பணி செய்யும் பெண் ஆகியோருக்கு தொற்று உறுதியானது. அவர்கள் இன்று வெலிக்கந்தைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here