முல்லைத்தீவு மாவட்டத்தில் அத்தியாவசிய தேவைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

முல்லைத்தீவு மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பிலான விஷேட கலந்துரையாடல் நேற்று (01) முல்லைத்தீவு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் இராணுவ உயர் அதிகாரிகள், பொலிசார் மற்றும் அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது உள்ள சுகாதாரத்துறை சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் அவற்றினுடைய தேவைகள் மற்றும் குறைபாடுகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அதனைவிட மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்குவதில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள், மாவட்டத்தில் உணவுப் பொருட்களுக்கான நிலைமைகள் எவ்வாறு காணப்படுகிறது மற்றும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளல், மீன்பிடி தொழிலை மேற்கொள்ளல் மற்றும் மீன் மற்றும் மரக்கறிவகைகளை மாவட்டத்திற்குள் அனைத்து மக்களுக்கும் கிடைக்கக்கூடிய வகையில் எவ்வாறு வழங்குவது போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக இங்கு கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here