கொரோனாவால் மேலுமொருவர் உயிரிழப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (1) பின்னிரவு 11.30 அளவில் அவர் உயிரிழந்தார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக இனங்காணப்பட்ட மருதானை பகுதியைச் சேர்ந்த பீ.எச்.எம்.ஜுனுஸ் (72) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த மூன்றாவது நபர் இவராவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here