ஐபிஎல் எதிர்ப்பு: அண்ணா சாலையில் அணிவகுத்த அமைப்புகள்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடத்த எதிர்ப்பு தெரிவித்து அண்ணா சாலையில் திரண்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தும் விதமாக, ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை அண்ணா சாலையில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் திரண்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்புகள் வைத்து பாதுகாப்பில் ஈடுபட்ட போலீஸார்.

காவல் வாகனத்தில் ஏற மறுத்து போலீஸாருடன் மல்லுகட்டும் போராட்டக்காரர்.

கைது செய்யப்பட்ட ரஜினி ரசிகர் ஒருவர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு கருப்பு பேட்ஜ்களை விநியோகிக்கிறார்.

போலீஸார் நடத்திய தடியடியில் காயமடைந்தவரை மருத்துவ சிகிச்சைக்காக தூக்கிச் செல்லும் இளைஞர்கள்

வாலாஜா சாலையில் முன்னேறிச் செல்லும் போராட்டக்காரர்களைத் தடுக்கும் போலீஸார்..

ஐபிஎல் வீரர்கள் ஆம்புலன்ஸ் வண்டியில் மைதானத்துக்கு ரகசியமாக அழைத்துச் செல்லப்படுகிறார்களோ என்ற சந்தேகத்தில் வாகனத்தைச் சூழ்ந்த போராட்டக்காரர்கள்.

அண்ணா சாலையில் போலீஸார் நடத்திய தடியடியால் சிதறிக் கிடக்கும் காலணிகள்.

தடியடி நடத்தியும் கலையாதவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தும் போலீஸார்.

போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள்

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here