வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட முதியவர்: கொரோனாவால் உயிரிழந்தாரா?

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தார் என சந்தேகிக்கப்படும் ஒருவரின்  சடலம் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கஹதுடுவ சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.

கொழும்பு, மேட்டெகொட வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் 67 வயதான ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று காலை அவர் உயிரிழந்தார்.

அவர் கடந்த பெப்ரவரி 20ஆம் திகதியே மாலைதீவிலிருந்து இலங்கைக்கு வந்திருக்கிறார்.

பொது சுகாதார ஆய்வாளர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டதாகவும், கொரோனா தாக்கத்தால் இந்த உயிரிழப்பு நிகழ்ந்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் கஹதுடுவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஹோமகாமா அடிப்படை மருத்துவமனையின் நீதித்துறை மருத்துவ அதிகாரி வைத்தியர் வருண ஜெயசூரிய சம்பவ இடத்திற்கு நேரில் வந்து சடலத்தை பார்வையிட்டு, மேலதிக பரிசோதனைகளுக்காக களுபோவில போதனா வைத்தியசாலைக்கு அனுப்ப உத்தரவிட்டார்.

மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கை வரும் வரை அந்த வீட்டிலிலிருப்பவர்கள் சுயதனிமைக்குள்ளாக உத்தரவிடப்பட்டுள்ளது.

வீடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை கிருமி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here