மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனால் உலருணவுப் பொதிகள் வழங்கிவைப்பு

நாட்டில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர், இதில் கிராமப்புறங்களில் உள்ள குடும்பங்களின் நிலை பெரும் பாதிப்புக்குளாகியுள்ளது.

மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராமங்களான மருதங்கேணிகுளம் மற்றும் குஞ்சுக்குளம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கான உலருணவுப் பொருட்களை வழங்கிவைத்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளரின் அனுமதிக்கு அமைவாக குறித்த கிராமங்களில் உள்ள குடும்பங்களுக்கு இராமகிருஷ்ண மிஷன் சுவாமிகள் உடனான குழு நேரடி விஜயம் மேற்கொண்டு அங்குள்ள மக்களுக்கு உலருணவு பொதிகளை கையளித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here