காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிய சமுர்த்தி பயனாளிகள்!

பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல் 319 ஜீ கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட சமுர்த்தி பயனாளிகள், சமுர்த்தி நிவாரணம் வழங்கப்படாமல் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

சமுர்த்தி கொடுப்பனவான 1900ரூபாவும், சமுர்த்தி நிவாரண பொருட்களும் வழங்குவதாக பயனாளிகளை காலை வேளையில் வருமாறு சமுர்த்தி உத்தியோகத்தரினால் அறிவிக்கப்பட்டதாகவும், காலை எட்டுமணியில் இருந்து மதியம் 2.30மணி வரை பயனாளிகள் கிராம உத்தியோகத்தரின் காரியாலயத்தின் சுமார் ஆறு மணித்தியாலங்கள் காந்திருந்த போதும், அதிகாரிகள் யாரும் வரவில்லை.

இறுதியில் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியதாக தெரிவிக்கின்றனர்.

“நாம் காலையில் இருந்து எமக்கு வழங்க உள்ள கொடுப்பனவை பெற்றுகொள்ள வந்தோம். ஆனால் ஆறு மணி நேரம் காத்திருந்தும் இறுதிவரை எமக்கு சமுர்த்தி கொடுப்பனவும் சமுர்த்தி நிவாரணமும் கிடைக்கவில்லை. நாம் காலை உணவு கூட உண்ணாமல் வந்தோம். கிராம உத்தியோகத்தருக்கும் சமுர்த்தி உத்தியோகத்தருக்கும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வினவியபோது கினிகத்தேனையில் இருப்பதாக பொய் கூறுகிறார்கள்.

எமக்கு அரசாங்கம் வழங்குகின்ற கொடுப்பனவை தான் நாம் கேட்கிறோம். ஏன் எங்களை இப்படி ஏமாற்றுகிறார்கள். எனவே இது போன்ற சம்பவங்களுக்கு அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சமுர்த்தி பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here