மனைவியர்களாலேயே தனிமைப்படுத்தப்படுகிறோம்: சமுர்த்தி உத்தியோகத்தர்களின் வேதனை!

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்திற்கு மிக ஆளாகும் நிலையனை எதிர் கொள்ளவுள்ள சமுர்த்தி பயனாளிகளும் சமுர்த்தி அதிகாரிகளும்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அபாயத்தினை எதிர் கொண்டு வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்தும் முகமாக அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக ஊரடங்கு சட்டங்கள் நடைமுறையில் உள்ள நிலையில்வாழ்வாதரத்தினை இழந்த மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் முகமாக அரசாங்கம் சமுர்த்தி திட்டத்தின் ஊடாக சலுகை கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் முதற் கட்டமாக ஒவ்வொரு சமுர்த்தி முத்திரை பயனாளி குடும்பத்திற்கும் ரூபா 5000 வீதம் இலகு கடன் தொகை ஒன்றினை வழங்கி வருகின்றது

குறித்த பணத் தொகையானது நேரடியாக சமுர்த்தி முத்திரை பயனாளிகளின் கரங்களில் கொண்டு சேர்க்கும் பொறுப்பு சமுர்த்தி கள உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புகளின் உறுப்பினர்களின் பங்களிப்புடன் நடை முறைப்படுத்தப்பட்ட வேண்டும் என்ற சுற்றுநிருபங்களும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த கொடிப்பனவுக்காக ஒரு பிரிவுக்கான சமுர்த்தி கள உத்தியோகத்தர் சமுர்த்தி வங்கியில் இருந்து ஒரு தடவையில் ரூபா 300000 பணத்தினை பெற்றுச் சென்று சுமார் ஒரு குடும்பத்திற்கு ரூபா 5000 வீதம் 60 குடும்பங்களுக்கு வழங்க கூடியதாக இருக்கும்.

தனிமைப்படுத்தி ஒவ்வொரு நபர்களும் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என சுகாதார பிரிவு ஆலோசனை வழங்கியுள்ள நிலையில், ஒரு சமுர்த்தி உத்தியோகத்தர் தனது கடமை பிரிவில் ஒரு நாளைக்கு 60 குடும்பங்களை சந்தித்து குறித்த கடனை வழங்குவது என்பது அந்த உத்தியோகத்தரின் சுய பாதுகாப்பிற்கு உகந்த விடயமாக இல்லாத நிலையே காணப்படுகிறது.

மாவட்டச் செயலாளர்கள், சமுர்த்தி மாவட்ட பணிப்பாளர்கள், பிரதேச செயலாளர்கள் இந்த கொடுப்பனவினை துரித கதியில் வழங்க வேண்டும் என சமுர்த்தி கள உத்தியோகத்தர்களுக்கு அழுத்தங்களை பிரயோகிப்பது தற்போதைய சூழ் நிலையில் பொருத்தமற்ற ஒன்றாகவே கருதப்பட வேண்டியுள்ளது.

அத்துடன் சாதாரனமாக ஒரு கிராம உத்தியோகத்தர் பிரிவில் 350 தொடக்கம் 1000 வரையான சமுர்த்தி முத்திரை பெறும் குடும்பங்கள் இருப்பதனால், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பாதுகாப்பற்ற நிலைமையில் உள்ளனர்.

தற்போதைய நெருக்கடியான நிலைமையில் ஏனைய துறைகளை போல சமுர்த்தி துறையும் களத்தில் இறங்கி செயற்பட வேண்டும் என்பது உண்மைதான். ஆனால், ஏனைய துறைகளிற்று வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு வசதிகள் எதுவும் சமுர்த்தி உத்தியோகத்தர்களிற்கு கிடையாது.

ஒவ்வொரு வீடு வீடாக சமுர்த்தி உத்தியோகத்தர்கள் செல்கிறார்கள். முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால் அவர்களோ, அல்லது அவர்கள் மூலம் மற்றவர்களோ தொற்றுக்குள்ளாகும் அபாயமுள்ளது.

முகவுறை தவிர்த்த சுயபாதுகாப்பு அங்கிகள் எதுவும் இல்லாத நிலையிலேயே உத்தியோகத்தர்கள் பொது மக்கள் மத்தியில் கடமை புரியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அந்த நிலையில் பல சமுர்த்தி உத்தியோகத்தர்கள் சொந்த வீடுகளிலும் அசெளகரியத்திற்குள்ளாகி வருகின்றனர். மனைவிமாரேலேயே தனிமைப்படுத்தப்படுகிறோம் என சமுர்த்தி உத்தியோகத்தர்கள் வேடிக்கையாக குறிப்பிட்டாலும், இதன் பின்னால் உள்ளது ஆழமாக கவனிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு பிரச்சனையுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here