பின் கதவால் மதுபான விற்பனையில் ஈடுபட்ட கிளிநொச்சி விடுதிக்கு சீல்!

சட்டவிரோதமாக மதுபானம் விற்ற கிளிநொச்சி விடுதியொன்று சீல் வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தலையடுத்து, நாட்டில் ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நீக்கப்பட்ட சமயங்களிலும் மதுபானம் விற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இன்று கிளிநொச்சியில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட சமயத்தில் இங்கு மது விற்பனை நடந்து வந்தது. முன்பக்க கதவை மூடிவிட்டு, பின் பக்கத்தால் விற்பனை நடந்து வந்தது.

கிளிநொச்சியிலுள்ள பிற மதுச்சாலைகள் சிலவற்றிலும் இப்படியான சட்டவிரோத நடவடிக்கை இடம்பெறுவதாக கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று மதியம் சட்டவிரோத மது விற்பனையை கிளிநொச்சி பொலிசார் மற்றும் மதுவரித் திணைக்கள அதிகாரிகள் நேரில் கையும் மெய்யுமுாக பிடித்தனர்.

இதையடுத்து மதுபானச்சாலை சீல் வைக்கப்பட்டது.

பொலிசாரும், மதுவரித் திணைக்களமும் இரண்டு தனித்தனி வழக்குகள் மதுபானச்சாலை மீது தொடரவுள்ளனர்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்மணியொருவருக்கு சொந்தமானது இந்த மதுபானச்சாலையென்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here