ஊழியருக்கு கிருமித் தொற்று: இரண்டு வாரங்கள் கிளையை மூடுகிறது ஹட்டன் நஷனல் வங்கி!

ஊழியர் ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டதையடுத்து, கொழும்பு, கொள்ளுப்பிட்டியிலுள்ள கிளையை இரண்டு வாரங்களிற்கு மூடுவதாக ஹட்டன் நஷனல் வங்கி அறிவித்துள்ளது.

ஹட்டன் நஷனல் வங்கியின் கொள்ளுப்பிட்டி கிளை ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றிற்கு இலக்காகியிருந்தார்.

இதையடுத்து வங்கி விடுத்துள்ள அறிவிப்பில், “ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கிளையின் அனைத்து ஊழியர்களுக்கும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தனிமைப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

அதன்படி, கொள்ளுப்பிட்டி கிளை 14 நாட்களாக தற்காலிகமாக மூடப்பட்டு அலுவலக கட்டிடம் கிருமிநீக்கம் செய்யப்படுகிறது.

இந்த கிளையின் வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் வங்கி சேவைகள் உள்ளிடட சேவைகளை தமது இன்னொரு கிளையில் மத்திய வங்கியின் கட்டளைகளின்படி பெற்றுக்கொள்ள முடியுமென்றும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here