மன்னாரில் பல வருடங்களான மரக்கறி வியாபாரத்தில் ஈடுபடுபவர்களிற்கு பாஸ் இல்லை!

மன்னார் நகர சபை பிரிவுக்குட்பட்ட சந்தை கட்டிடத் தொகுதியில் பல வருடங்களாக மரக்கறி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற மரக்கறி வியாபாரிகள் தமது ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.

இவ்விடையம் தொடர்பாக அவர்கள் இன்று புதன் கிழமை (1) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள ‘கொரோனா’ வைரஸ் தாக்கத்தின் காரணமாக மன்னார் மாவட்ட மக்கள் உட்பட தாங்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவித்தனர்.

தற்போதைய கால கட்டத்தில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு மன்னாரில் நிறந்தரமாக மரக்கறி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மரக்கறி வியாபாரிகளாகிய நாங்கள் தென்பகுதியில் இருந்து மரக்கறி வகைகளை மன்னாரிற்கு கொண்டு வர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற போதும் ஒரு சில தினங்கள் மட்டும் சரியான முறையில் பொலிஸாரின் நடை முறை ஊடாக பாஸ் வழங்கப்பட்டது.

அதற்கமைவாக நாங்கள் பொருட்களை கொண்டு வந்து மக்களுக்கு நியாயமான விலைக்கு விற்பனை செய்தோம்.

ஆனால் தற்போது நிரந்தரமாக மன்னாரில் மரக்கறி வியாபாரம் செய்கின்றவர்களை தவிர ஏனையவர்களுக்கு பாஸ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதிகளவாக பாஸ் வழங்கப்பட்டவர்களுக்கும் மரக்கறி வியாபாரத்திற்கும் எவ்வித தொடர்புகளும் இல்லாத நிலையில் அவர்கள் இவ் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களுக்கான வசதி வாய்ப்பக்கள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

இவ்விடையம் தொடர்பாக பிரதேச செயலாளர், அரசாங்க அதிபர், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நீண்ட காலமாக பல்வேறு இடர்களுக்கு மத்தியில் மரக்கறி வியாபரத்தில் ஈடுபட்டு வரும் வியாபாரிகள் தற்போதைய கால கட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தென்னிலங்கையில் இருந்தும் வாகனங்கள் மன்னாரிற்கு மரக்கறியுடன் வந்து செல்கின்றது.

ஆனால் நாங்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் சுமார் 7 அதிகாரிகளின் கையொப்பங்களுடன் பெற்றுக் கொள்ளப்பட்ட ‘பாஸ்’ உடனடியாக ரத்துச் செய்யப்பட்டுள்ள நிலையில் நாங்கள் மரக்கறி வகைகளை கொண்டு வர தூர இடங்களுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே நீண்ட காலமாக மன்னாரில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் வியாபாரிகளின் நலனையும், மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு உரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மன்னார் மரக்கறி வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here