அக்குரண பிரதேச செயலகத்திலுள்ள சகல கிராமசேவகர் பிரிவுகளும் முடக்கம்!

அக்குரண பிரதேச செயலக பிரிவின் அனைத்து கிராமசேவகர் பிரிவுகளும் முடக்கப்பட்டுள்ளன.

மத்திய மாகாணத்தின் முதலாவது கொரோனா நோயாளி சில தினங்களின் முன்னர் அக்குரன, தெலம்புகஹவட்ட பகுதியில் கண்டறியப்பட்டார். அவரது உறவினர்களும் தொற்றினால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டதையடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அக்குரன பிரதேச செயலாளர் இந்திக குமாரி அபேசிங்க இதனை அறிவித்தார்.

அனைத்து கிராமசேவகர் பிரிவுகளும் முடக்கப்பட்டுள்ளதாகவும், வீதிகளை யாரும் பயன்படுத்த முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவினால் கண்டறியப்பட்டவரின் மனைவி உள்ளிட்ட நெருங்கிய உறவினர்கள் மூவருக்கு தொற்று ஏற்பட்டிருந்தது நேற்று கண்டறியப்பட்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here