கஜோலுக்கு கொரோனா தொற்றா?

பிரபல நடிகை கஜோலுக்கும் மகள் நைசாவுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல்களை நடிகர் அஜய் தேவ்கன் மறுத்துள்ளார்.

பிரபல நடிகையும் நடிகர் அஜய் தேவ்கனின் மனைவியுமான கஜோலுக்கும் அவருடைய மகள் நைசாவுக்கும் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால் இதை மறுத்துள்ளார் அஜய் தேவ்கன்.

ட்விட்டரில் அவர் கூறியதாவது:

விசாரித்ததற்கு நன்றி. கஜோலும் நைசாவும் நலமாக உள்ளார்கள். அவர்களுடைய உடல்நலன் குறித்த வதந்திகள் அடிப்படை ஆதாரமில்லாதவை என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here