விஸ்வாசம் படத்தில் மாஸ் கெட்டப்பில் தம்பி ராமையா.! அப்போ அஜித்.? ( புகைப்படம் உள்ளே)

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் நான்காவது திரைப்படம் விஸ்வாசம். இந்த படம் வீரம் படத்தை போல் இருக்கும் என பட தரப்பில் இருந்து கூறியுள்ளார்கள்.

விஸ்வாசத்தில் தம்பி ராமையா அஜித்தின் தாய்மாமனாக நடித்துள்ளார். படத்தில் அஜித்திற்கு இரண்டு வேடம் என கூறப்படுகிறது. அதேபோல் அஜித்தின் தாய்மாமனாக நடிக்கும் தம்பி ராமையாவுக்கும் இரண்டு வேடம் இருக்கிறது என உறுதியாகியுள்ளது. இவரின் இரண்டு கெட்டப் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் தம்பிராமையா கருப்பு முடியிலும், வெள்ளை முடியிலும் இருக்கிறார். அப்பொழுது அஜித்தும் கருப்பு முடியில் வருவார் என நம்பிக்கை வந்துள்ளது அஜித் ரசிகர்களிடம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here