3 தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்ற வெள்ளவத்தை தம்பதி!

வெள்ளவத்தை பகுதியில் வசிக்கும் வயதான தம்பதியினர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. கொழும்பு மாநகரசபையின் மருத்துவ அதிகாரிகள் அவர்களை தனிமைப்படுத்தி பரிசோதனை நடத்தி, கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இந்த தம்பதியினர் 84 வயதானவர்கள்.

நோய்வாய்ப்பட்டதும், கொழும்பிலுள்ள 3 தனியார் வைத்தியசாலைகளில் அவர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர். இவர்களின் பேத்திகள் இருவர் வைத்தியர்களாக உள்ளனர். அவர்களே வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளனர். எனினும், நோய் அறிகுறிகளை வயதான தம்பதியினர் வைத்தியசாலைகளில் வெளிப்படுத்தவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

வயதான தம்பதியினரின் இரண்டு மகன்களும் கடந்த 14ஆம் திகதி இந்தியாவிற்கு சென்று திரும்பியுள்ளனர். அவர்கள் பரிசோதனை மேற்கொண்டிருந்தபோது, வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கவில்லையென்பது தெரிய வந்திருந்தது.

இந்த தம்பதி வசித்த பகுதியில் உள்ள 45 இற்கும் அதிகமானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைக்குள்ளாக்கப்படவுள்ளனர்.

தம்பதியினர் சிகிச்சை பெற்ற 3 வைத்தியசாலைகளின் ஊழியர்களும் தனிமைப்படுத்தப்படவுள்ளனர்.

கொரோனா வைரஸால் இதுவரை கொழும்பில் 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here