புத்தளத்தில் நேற்று 10 பேர் கொரோனாவுடன் அடையாளம் காணப்பட்டனர்!

நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர் ஒருவர் தங்காலையிலுள்ள சுற்றுலா விடுதியொன்றில் தங்கியிருந்த விடயம் தெரிய வந்ததையடுத்து, சுற்றுலா விடுதி நேற்று சீல் வைக்கப்பட்டது.

சுற்றுலா வழிகாட்டியொருவரே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.

அவர் இந்த மாதம் 15,16,17ஆம் திகதிகளில் தங்காலையிலுள்ள சுற்றுலா விடுதியில் தங்கியிருந்துள்ளார். இதையடுத்து, அந்த விடுதி சீல் வைக்கப்பட்டது.

இதேவேளை, நேற்று புத்தளத்தில் 10 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இந்தோனேசியாவிற்கு சென்று வந்தவரின் நண்பர் மற்றும் அவரது குடும்ப உறவினர்கள் சிலர் உள்ளிட்ட 10 பேரே தொற்றிற்கு உள்ளாகியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here