இரவு விடுதியில் பெண்ணை துஷ்பிரயோகம் செய்த இருவரை பற்றிய தகவல் கோரும் பொலிசார்!

கனடாவின் மிசிசாகா பகுதி இரவு விடுதியில் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு ஆசாமிகளை பீல் பிராந்திய பொலிசார் கைது செய்துள்ளனர். அவர்களின் குற்றச்செயல்கள் தொடர்பாக தகவல்கள் இருப்பின் தமக்கு வழங்கும்படி, பொதுமக்களிடம் பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பிரம்டன் பகுதியை சேர்ந்த இரண்டு ஆண்களே கைதாகியுள்ளனர்.

கடந்த பெப்ரவரி மாதம் 29ம் திகதி இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்தது. குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பிராம்ப்டன் ஆண்களை பீல் பிராந்திய போலீசார் கைது செய்துள்ளனர்.

Aimco Blvd பகுதியில் Dixie வீதி பகுதியிலுள்ள இரவு விடுதியில் இந்த சம்பவம் நடந்தது.

இரவு விடுதி பூட்டப்பட்ட பின்னர் அந்த பெண் அங்கு வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டார். அதிகாலை 3:50 மணியளவில் பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில், இரவு விடுதிக்கு சென்று பெண்ணை மீட்டெடுத்தனர். அவர் சிறு காயங்களிற்காக சிகிச்சையும் பெற்றுக் கொண்டார்.

நேற்று திங்கட்கிழமை டைரன் ஜான்சோன் (31), டொனவன் கிரே (42) ஆகிய இருவரும் கைதாகினர். அவர்கள் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இருப்பின் 905-453-2121 ext 3460 என்ற எண்ணிலோ அல்லது பீல் குற்றத்தடுப்பு பழஸ்ரீிரிவு 1-800-222-டிப்ஸ் (8477) என்ற எண்ணிலோ தொடர்புகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here