சர்வதேச கடலில் மிதக்கும் போதைப்பொருள் களஞ்சியத்தை கைப்பற்றிய கடற்படை: 12,500 மில்லியன் பெறுமதியான போதைப்பொருளாம்!

சர்வதேச கடற்பரப்பில் மிதக்கும் போதைப்பொருள் களஞ்சியமான கப்பலொன்றை இலங்கை கடற்படை கைப்பற்றியுள்ளது.

கடந்த 28ம் திகதி இந்த கப்பல் கைப்பற்றப்பட்டது. 463 கடல்மைல் தொலைவில் இந்த கப்பல் கைப்பற்றப்பட்டது.

இலங்கை கடற்படையின் ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பலான சாயுர இந்த நடவடிக்கையில் ஈடுபட்டது. 500 கிலோ ஐஸ் போதைப்பொருள், 500 கிலோ கோகெயின் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. 200 பாக்கெட் அடையாளம் தெரியாத போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு இன்னும் கணக்கிடப்படவில்லை. அண்ளவான 12,500 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியிருக்கலாமென மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கப்பல் டிக்கொவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வரபபடவுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களில் இலங்கைக்கு போதைப்பொருள் கொண்டு செல்லும்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள 3 வது வெளிநாட்டு கப்பல் இதுவாகும். முன்னதாக, பெப்ரவரி 22 மற்றும் 25 ஆகிய திகதிகளில், இலங்கைக்கு போதைப்பொருள் கடத்திய இரண்டு கப்பல்கள் கைப்பற்றப்பட்டன. 16 வெளிநாட்டினர் மற்றும் ஐந்து இலங்கையர்கள் மற்றும் ஆறு இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here