எனக்கு நடந்தது கொஞ்சம்; நயன்தாரா, த்ரிஷா, காஜலுக்கு நடந்ததை கேட்டால்… ஸ்ரீரெட்டியின் இன்றைய சரவெடி!

நடிகை ஸ்ரீ ரெட்டி கடந்த சில மாதங்களாகவே தெலுங்கு சினிமாவை அதிர வைத்தார். அதனால் தெலுங்கு சினிமாவே ஸ்தம்பித்தது. பல நடிகர்கள், தயாரிப்பாளர்கள் எங்கு நம் குட்டு உடைந்துவிடுமோ என பயந்தார்கள்.

இந்த நிலையில் பரபரப்பின் உச்சமாக தமிழ் சினிமா பக்கம் பார்வையை திருப்பி, தினமும் ஏதாவது ஒரு விஷயத்தை போட்டு உடைத்து வருகிறார். முதலில் இயக்குனர் முருகதாஸ் லீலைகளை கூறினார். அதன் பிறகு ஸ்ரீகாந்த் மற்றும் சுந்தர் சி என பலரின் வண்டவாளங்களை போட்டுடைத்தார். அதற்க்கு சுந்தர் சி சட்டரீதியாக சந்திப்பேன் என கூறியுள்ளார்.

ஸ்ரீ ரெட்டி இதுநாள் வரை தன்னிடம் தவறாக நடந்துகொண்ட நடிகர்களை பற்றி தான் கூறினார். ஆனால் முதல் முறையாக நடிகைகளை பற்றி பேசியுள்ளார். “நிறைய பேர் எனக்கு மட்டும் தான் இதுபோல் தவறான விஷயம் நடந்துள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் என்னுடையது மிகவும் சிறியது. நயன்தாரா, திரிஷா, காஜல் அகர்வால், சமந்தா போன்ற நடிகைகளுக்கு நடந்தது வெளியே சொல்ல ஆரம்பித்தால் அதிகம் தெரியவரும்“ என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here