அக்குரணை வாசி சென்று வந்த மரணவீடு: தம்புள்ளையில் 33 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

கண்டி அக்குரனவில் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட நபர் வந்து சென்ற தம்புள்ளை நிகவதவன பகுதியில் 33 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

7 வீடுகளை சேர்ந்த 33 பேரை பொதுச்சுகாதார பரிசோதகர்கள், பொலிசார் இன்று தனிமைப்படுத்தினர்.

அக்குரனை பகுதியை சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றுடன் சில தினங்களின் முன்னர் அடையாம் காணப்பட்டிருந்தார். அவர் சென்று வந்த இடங்களை புலனாய்வு பிரிவினர் ஆராய்ந்தபோது, தம்புள்ளை நிகவதவன பகுதியில் மரண வீடொன்றிற்கு அவர் சென்று வந்தது தெரிய வந்தது.

ஒரு வர்த்தகரின் இல்ல மரண வீட்டிலேயே அவர் கலந்து கொண்டிருந்தார்.

அந்த பகுதியில் இன்று பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிசார் நடத்திய விசாரணையில், கொரோனா தொற்றுக்குள்ளானவருடன் பழகிய, அருகிலிருந்த 33 பேர் அடையாளம் காணப்பட்டனர். மரணம் நடந்த வீடு உள்ளிட்ட 7 வீடுகளை சேர்ந்த 33 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here