நீர்கொழும்பில் உயிரிழந்தவர் யாழில் தங்கியிருந்த 3 வீடுகளிலிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்!

யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பகுதியில் 3 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் இன்று இதனை தெரிவித்தார்.

கொரோனா தொற்றினால் நேற்று உயிரிழந்த நீர்கொழும்பு வாசி, அண்மையில் யாழ்ப்பாணம் வந்திருந்தார். 7ம் திகதி முதல் 11ம் திகதி வரை அவர் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தார்.

அவர் தங்கியிருந்த, நெருக்கமாக பழகிய  3 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here