132 ஆக உயர்ந்தது கொரோனா: தொற்று குடும்ப உறுப்பினர்களே அதிகம்!

கொரோனா வைரஸ் பாதித்த 10 நோயாளிகள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, நாட்டில் பதிவான மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது.

இன்று அடையாளம் காணப்பட்ட 10 பேரில் 6 பேர் பேருவளையை சேர்ந்தவர்கள்.

இந்த ஆறு நபர்களில், நான்கு பேர், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட ஒரு நோயாளியின் உறவினர்கள் ஆவர்.

மேலும், சில நாட்களுக்கு முன்பு அக்குரன பகுதியில் அடையாளம் காணப்பட்ட நோயாளியின் குடும்ப உறுப்பினர்கள் மூவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

10 வது நோயாளி இன்று தெஹிவளை பகுதியில்அடையாளம் காணப்பட்டார்

———————————

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 129 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 7 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டது அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here